Tuesday, July 20, 2004

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக


nila_kaalam 
"இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்றெல்லாம் விளம்பரப்படுத்தாமல் வியாழன் இரவு 8:30 மணிக்கு கே.டிவி யில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படம் "நிலாக் காலம்". எப்படியோ என் அம்மாவை "மெட்டி ஒலி"யில் இருந்து திசைத்திருப்பி, முழு படத்தையும் பார்த்தேன். பல நாட்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி எனக்கு. 

  
 பார்க்கும் போதே ஒரு நாவலை படமாக்கி உள்ளனர் என்று நன்றாகவே தெரிந்தது. (சற்றே பெரிய கவிதை என்றும் சொல்லலாம்). குழந்தைகள் நடித்த படம் , ஆனால் குழந்தைகளுக்கான படம் என்றும் சொல்ல இயலாது. (சில விவகாரமான விஷயங்கள் படத்தில் உண்டு. அதுக்காக, எது என்னமோன்னு நினைக்காம நல்ல புள்ளையா படத்தை பாருங்க). ஒரு பெரலல் யுனிவர்ஸ் போன்ற விஷயம், அழகாக சொல்லப்பட்டிருந்தது. குழந்தைகளின் (புள்ளி, அமர், நிலா) உலகமும், வயது வந்தோரின் உலகமும் எவ்வளவு வேறுபடுகிறது என்பதை ரசிக்கும்படியாக சித்தரித்திருந்தனர்.
 
குழந்தைகளின் உலகத்தில் வயது வந்தோர் நுழைய முற்படும் போது என்ன இடையூறுகள் என்பதுதான் கதை. (அப்பாடா...கடைசி வரைக்கும் கதைய சொல்லலை :)) ). சிந்தனையை தூண்டும் வசனங்களும், "satiric" நகைச்சுவைகளும், குழந்தைகளின் நடிப்பும், நல்ல திரைக்கதையும் படத்தினை நன்றாக நகர்த்திச்சென்றது.

ஒரே ஒரு குறை, வால்டர் தேவாரம். இவரும் இப்படத்தில் நடித்திருக்கிறார் (?). யாரோ போலீஸ் என்றால் விறைப்பாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் போலும். படுத்தியெடுத்திவிட்டார் :( .

நாவல் என்று சொன்னேன், யார் எழுதியது என்று சொல்லவில்லையே - சுஜாதா. சற்றே பெரிய கவிதை என்று சொன்னதன் அர்த்தமும் இதுதான்.

("நிலாக்காலம்", இயக்கம் - ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா; கதை, வசனம் - சுஜாதா; சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது, 2000 - செல்வன் .உதயராஜ்)7 Comments:

At 10:13 PM, Blogger Boston Bala said...

கே டிவி போட்டு விட வேண்டும் போல; இந்த மாதிரி நல்ல (பார்க்காத) படங்கள் எல்லாம் போடுகிறார்களா?

 
At 1:03 PM, Blogger Santhosh Guru said...

டேய் மாம்ஸ், கே டி.வி யா இல்ல விஜய் டி.வியான்னு தெரியல. எதோ ஒன்னுத்துல, கோவில்பட்டி வீரலட்சுமி போட்டான். பாத்தியா. அதுல ஒரு சீன் , ப்ரேவ் ஹார்ட் படத்துல இருந்து அப்படியே காப்பி அடிச்சிருந்தான். கொஞ்ச, நஞ்சமில்ல,ஃபிரேம் பை ஃபிரேம் காப்பி

 
At 4:11 AM, Blogger Boston Bala said...

Athu entha scene Santhosh? Konjam sollungalen...

 
At 7:07 PM, Blogger Santhosh Guru said...

ஆகா, "scene"ன்னு மொட்டையா நான் சொல்லிருக்க கூடாது. ப்ரேவ் ஹார்ட்ல, மெல் கிப்சனோட பொண்டாட்டிய கயித்துல கட்டிப்போட்டுட்டு, அவனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நம்ம தலைவர், அப்பதான் குதிர மேல ஒக்காந்துகினு ஸ்லோ மோஷன்ல, வருவாரு வருவாரு, ஆயுதம் எதுவும் இல்லைனு கைய விரிச்சிக்கினே வருவாரு. அப்புறம் கிட்டவந்தப்புறம் முதுகு மறைச்சு வச்சுருந்த ஆயுதத்தால எதிரிகளை போட்டுத் தாக்குவாரு. அதை அப்படியே சிம்ரன், "கோ.வீ" படத்துல பண்ணுவாங்க. அந்த ஸ்லோ மோஷன், குதிரை மூச்சு உடறத காட்டுறது, குதிரையோட மூக்கனாங்கயிற ஒருத்தன் பிடிக்கிறது, உடனே ஹீரோ(யின்) ஆயுதத்தால தாக்குறதுனு...நான் ஆஃபிஸ்ல பண்ற வேலைய (Ctrl+C, Ctrl+V) டைரக்டர் படத்துல சூப்பரா பண்ணியிருந்தாரு.

(பாலா, "scene"ன்னு சொன்னதும் வேறேதாவுது நான்-வெஜிடேரியன் எதிர்பார்த்தீங்களா.. ;) )

 
At 7:20 AM, Blogger Sanjeeth said...

enna baala , santhosh ennamo solraaru ;)

 
At 12:20 AM, Blogger Boston Bala said...

சே... இதுதானா :-( :P (ஆசை காட்டி மோசம் செஞ்சிட்டாரே ;)

 
At 1:37 PM, Anonymous Anonymous said...

enga veetlaiyum intha padatha meti oli maranthu
paartha kyabagam.. one interesting point is that
bringing adult's perpective into the life of children tells a tale as touching as Nila Kaalam, while if attempt something vice versa, u get something like New!

-U-Know-Vu

 

Post a Comment

<< Home

Powered by Blogger