Thursday, August 12, 2004

நியூ-ஒரு நல்ல எடுத்துக்காட்டு

தலைப்பை பார்த்து விட்டு இது நியூ படத்தின் விமர்சனம் என்று நினைத்தவர்களுக்கெள்ளாம் -"Iam sorry, நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. விரசமான திரைப்படம் என்று விமர்சனங்களை படித்து விட்டு, உடனே அருகில் உள்ள theatre-ல் மூன்று மணிநேரம் கண் சிமிட்டாமல் பார்த்து விட்டு "மிகவும் விரசம்" என்று என் பதிவில் கருத்து தெரிவிக்கும் ஆளும் நானில்லை".(அப்பாடா, ஒட்டு மொத்த ப்லாகர் சமூகத்தையும் நக்கல் அடிச்சாச்சு!)
சரி,சரி! பெரிய ஞானி மாதிரி எல்லாம் பேசாம, உண்மையை நானே ஒப்புக் கொள்கிறேன் - நான் நியூ பார்க்காததற்கு ஒரே காரணம் நான் இருக்கும் இடம் தான் - பெங்களூர்! ஆமாங்க இங்க தமிழ்ப் படமெல்லாம், மூட்ட பூச்சிகளுக்கு பேர் போன theatre-la தாங்க ஒடும்(?). அது கூட பரவாயில்லைங்க, ஒரு தடவை என் seat-க்கு கீழ் ஜம்முன்னு ஒரு நாய் தூங்கிக்கிட்டு இருந்துச்சு! இப்படி theatre-கள் இருந்தும்,"நியூ" அசராமல் பெங்களூரில் "House-full"-ஆக ஓடியது!(விருமாண்டி இங்கு multiplex-இல் release செய்யப்பட்டது. இரண்டாம் நாள் theatre-இல் என்னை சேர்த்து நாலே பேர் :( )
இந்த "அனைவராளும் பார்க்கப் படும் விரசமான படம்" வேரொரு நல்ல விஷயத்திற்கு எடுத்துக்காட்டு-தூய தமிழில் பாடல் வரிகள் கொண்டும் ஒரு பாடல் இன்று hit ஆகலாம் ! "தொட்டால் பூ மலரும்" என்ற பாடல் நல்ல hit. தினம் சுப்ரபாதம் போல் அனைத்து டி.வி channel-களிலும் ஒளிபரப்பப் படுகிறது! வித்யாசமான(என்கிருந்தோ காப்பி அடிக்கப் பட்ட) video-வை விட, பழைய வரிகளுக்கு புத்துயிர் ஊட்டிய ரெஹமானின் இசையை விட என்னை மிகவும் கவர்ந்த விஷயம் "Maro Maro Boys கைகள் Tomorrow" என்று முணுமுணுத்த உதடுகளை "தொட்டால்....." என்றும் முணுமுணுக்க வைத்தது தான். தமிழ் பாடல்களை இன்றும் தமிழிலேயே எழுதலாம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு!

11 Comments:

At 6:35 PM, Blogger sanjeeth said...

This comment has been removed by a blog administrator.

 
At 7:05 PM, Anonymous Anonymous said...

உங்க comment section ரொம்ப லொள்ளு ப்ண்ணுது Sir
:(

 
At 1:24 PM, Blogger Santhosh Guru said...

இதற்கு முன்பு மென்பொருள் மூலம் மரபிலக்கியம் என்ற பதிவினை எழுதியிருந்தாய்... எங்கே அது

 
At 6:40 PM, Anonymous Anonymous said...

Everyone seems to face problems with commenting.

 
At 7:59 AM, Blogger பரி (Pari) said...

Trying to post a comment...

 
At 8:02 AM, Blogger பரி (Pari) said...

Success! :-)

http://groups.yahoo.com/group/marabilakkiyam/message/1324யாப்பறிஞன்இருவரும் இணைந்து செயல்படலாமோ?

 
At 11:33 AM, Blogger sanjeeth said...

Pari, Even I was trying hard to post a comment here ... Some problem with the Blogger... many posts disappears... i dont know....

Kandippaga naam inaindhu compiler ezhudhalaam... ungalukku thani anjal ondru adhaippatri anuppugiren...

 
At 6:22 PM, Blogger dondu(#11168674346665545885) said...

கவிதையாக படகோட்டியில் மிளிர்ந்த "தொட்டால் பூ மலரும்" பாடல் இங்கு குரங்குக் கை பூமாலையாகப் போனது குறித்து மிக வருத்தம் அடைந்தேன். பாட்டின் இனிமையையே கற்பழித்து விட்டனர் பாவிகள்.

ராகவன்

 
At 5:11 PM, Blogger Murugesh said...

As Mr.sanjeev said Rahman had made it again.Thats an wonderfull tune.Mr.Ragavan say truly u dont like this song???dont pass over smart comments just to make an attraction.
whenever a person does something new or creative just dont discourage his effort.ofcourse i dont mean the old tune for that song is not nice.its good too.without any shade of that song rahman had made us tune for this song,simply by using the same lyrics.

 
At 8:43 AM, Blogger dondu(#11168674346665545885) said...

படகோட்டி படம் 1964-ல் வந்தது. தொட்டால் பூ மலரும் பாடல் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. பாடல் வரிகள், அதன் திரையாக்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நடிக நடிகையர் பற்றிய என் கருத்துக்கள் ஆகியவை கலந்ததுதான் அப்பாடலில் உள்ள என் ஈடுபாடு. அதைக் குலைக்கும் முறையில் புது மெட்டில் அப்பாடல் வந்தது எனக்குப் பிடிக்கவில்லை. அதை மீண்டும் வலியுறுத்துவதில் எனக்கு எந்த விதத் தயக்கமும் இல்லை. மற்றப்படி ஸ்மார்ட் ஆக ஒரு கருத்தைக் கூறும் எண்ணம் எனக்கில்லை. சங்கராபரணத்தில் வரும் ப்ரோசேரா எவருரா என்றப் பாடல் கொலையை கண்ட சங்கர சாஸ்திரிகளின் கோபம்தான் எனக்கு இப்புது மெட்டைக் கேட்டவுடன் வந்தது. புது மெட்டமைத்தது யார் என்பது கூட எனக்கு இது வரை தெரியாது. நான் அப்படத்தின் ஆங்கில மூலத்தை மட்டும்தான் பார்த்தேன்.

 
At 3:15 PM, Anonymous Anonymous said...

home equity loans

 

Post a Comment

<< Home

Powered by Blogger