சன் டிவி பட்டி மன்றங்கள்
இனிமேல் சன் டிவி பட்டி மன்றங்களை நகைச்சுவை மன்றங்கள் என்று பெயர் மாற்றம் செய்து விடலாம். ஒரு தலைப்பு கொடுத்து விடுகிறார்கள். அந்த தலைப்பின் கீழ் for-against என்று மாறி மாறி joke சொல்கிறார்கள், பாப்பையா & co(அநேகமாக இந்தியன் கிரிக்கெட் அணிக்குப் பிறகு தமிழ் நாட்டில் பிரபலமான அணி இவர்கள் தான்). தலைவர் பாப்பையா என்ன தீர்ப்பு சொல்வார் என்பதெல்லாம் நாம் தலைப்பை பார்த்த உடனே சொல்லி விடலாம். இவரது நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் latest-ஆக இருந்தாலும், இவர் கருத்துக்கள் எல்லாம் அதரப் பழசு. யாரவது இவருக்கு சொல்ல வேண்டும் - "நாம் வாழ்வது 2004 கி.பி, 2004 கி.மு அல்ல". சென்ற பட்டி மன்றத்தில் இவர் சொன்ன தீர்ப்பு-"ஆண் பெண் நட்பு தேவை அற்றது. ஏனெனில் அது நம் கலாச்சாரத்திற்கு ஒத்து வராது". பேராசிரயர் அவர்களே,"எடுக்கவோ, கோக்கவோ" என்ற வரிகளை மறந்து விட்டீர்களோ? நமக்கு பிடிக்காதவற்றை நம் கலாச்சாரத்தில் இருந்து நீக்கிவிட்டு, கலாச்சாரத்தை காரணம் காட்ட வேண்டியது. நட்பில் ஆண் என்ன பெண் என்ன?
இந்த சுதந்திர தின பட்டி மன்றத்தின் தலைப்பு - "தொல்லைகள் மிகுந்தது எது? காதல் திருமணங்களா? பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா?". இதற்கு என்ன தீர்ப்பு சொல்லியிருப்பார் என்று நான் சொல்லித் தெரிய தேவையில்லை. "காதல் போயின் சாதலடா" என்ற தலைப்பிலும் "காத(லி)ல் போயின் சாதலடா" என்ற தலைப்பிலும் மாறி மாறி joke-கள் சொல்லிக்கொண்டனர். இடை இடையே பாடவதியான கருத்துக்கள் வேறு. உதாரணத்திற்கு,
1. ஒரு வக்கீல் அம்மா சொல்கிறார் - " என்னிடம் ஒரு சிறுவன் சொன்னான் "இது தான் சங்க காலம். ஏன் என்றால் இன்று தான் முதலியார் சங்கம், நாடார் ச்ங்கம் என்று சங்கங்கள் இருக்கின்றன". இவை தான் நம் பாரம்பரிய சின்னங்கள். இவைகள் arranged marraige-இல் தான் காக்கப் படுகிறது" (அம்மையாரே, இதுக்கு தான் வக்கீலுக்கு படுச்சீங்களாக்கும்?)
2. இன்னொரு பிரஹஸ்பதி சொல்கிறார் - சமுதாயம் யானை போல். காதலர்கள் தவளைகள் போல். அவர்களால் யானைகளிடம் மோதி ஜெயிக்க முடியாது"
3. இன்னொருவர் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவனின் காதல் லீலைகளுக்கு சமுதாயம் எவ்வாறு தடையாக இருக்கிறது என்று எடுத்துக் காட்டுடன் விவாதிக்கிறார் (ஏன் LKG-லையே love பண்ண வேண்டியது தானே?)
இவர்கள் எல்லாம் அறிவை வீட்டில் வைத்துவிட்டு வருகிறார்கள் அல்லது யாரோ இவர்களை எல்லாம் ஒரு "time machine"-இல் ஏற்றி பின் நோக்கி ஒரு நெடிய பயணத்தில் அனுப்பி வைத்து விட்டார்கள்.
வாழ்க பட்டி மன்றங்கள். வாழ்க "கலாச்சார கருமங்கள்"!
(சரி இளைஞர்களே,சரி! இதற்காக எனக்கு சிலை எல்லாம் வைக்க வேண்டாம். எங்க வூட்டுல போட்டுக் கொடுக்காம இருந்தா சரி ;)
4 Comments:
அதெப்படி சன் டிவியெல்லாம் பாத்தும் இவ்வளவு தெளிவா இருக்கீங்க ;-)
நீங்க மட்டும் தான் அப்படி சொல்றீங்க ;)
நான் சன் டிவி பார்க்கவில்லை, ஆனால் இதே விவாதம் எனது நண்பனுக்கும் எனக்கும் ஒரு முறை ஏற்பட்டது. இத்தனைக்கும் அவன் மெத்த படித்தவன். //ஆண் பெண் நட்பு தேவை அற்றது. ஏனெனில் அது நம் கலாச்சாரத்திற்கு ஒத்து வராது// என்பதில் உடும்பு பிடியாக இருந்தான். என்ன சொல்லி இவர்களை திருத்துவது
Christmas is just around the corner. No time to go to the mall...then do your shopping online. We sell everything that the mall sells. Shop today!
Post a Comment
<< Home