மீண்டும் நான்...
பல நாட்களாக முடங்கிக் கிடந்த வலைப்பதிவினை தூசு தட்டி மறுபடியும் துவங்குகிறேன். "ஏன் நான் இத்தனை நாள் எழுதவில்லை?"(ஏதோ நான் எழுதுவதை நிறுத்திவிட்டதால்,அண்ட சராசரமே அந்தரத்தில் நின்றது போல்,மன்னிப்புக் கேட்டு ஒரு விளக்கம்) என்றெல்லாம் எழுதப் போவதில்லை;அப்படி எழுதினாலும் அபத்தம். "நான் ஏன் மறுபடி எழுதுகிறேன்?" என்பதற்கு மட்டும் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. என் வலைப்பதிவுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டிருந்த போது,(என் ஆங்கில வலைப்பதிவுகளை அடக்கம் செய்தாயிற்று :( , அதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அதன் தலைப்பு தான் - "Recursive சிந்தனை" ) ஒரு அழகிய கவிதை, மின்னஞ்சல் வடிவமாய் என்னை வந்தடைந்தது - இன்ப அதிர்ச்சி!

என்றோ ஒரு நாள், இப்பக்கத்தில் நான் செய்த முதல் பதிவில் - "இப்பதிவும் இனி வர இருக்கும் அனைத்துப் பதிவுகலும் என் நண்பன் சரவண ராஜாவுக்கே சமர்ப்பணம். ஐந்தே நிமிடங்களில் இம் மொழியின் மேல் காதல் உண்டாகச் செய்தவன்."- என எழுதியிருந்தேன். அவ்வரிகளும் Google-ம் செய்த உதவி;தொலைந்த நண்பர்கள் இணைய உதவிய இவ்வலைப்பினை அழிக்க மனம் வரவில்லை,தொடருகிறேன்.இணையத்திற்கு என் முகவரி இருக்கட்டுமே!
2 Comments:
கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்
kindly resume english blog also.
-Anthro.
Post a Comment
<< Home