Monday, June 13, 2005

கேலிக் கூத்து

ரெசிடன்சி சாலை சிக்னலை ஒட்டிய சுவரில் கருவெழுத்துக்களில் தமிழின் பெருமையை(ஒரு அடி அளவிற்கு) நிலை நாட்டி இருந்தனர் - "தமிழே உலகின் முதல் மொழி". சென் ற வாரம் பெய்த மழையினால் "முதல்"-இன் சுவடுகள் மட்டுமே இருந்தது. சட்டென்று பார்த்தால், "தமிழே உலகின் மொழி"! நமது கேலிக்கூத்துக்கள் போதாதென்று, இயற்கையின் நகையாட்டம் வேறு :)

7 Comments:

At 10:55 AM, Blogger மாயவரத்தான் said...

ஆனாலும் லொள்ளு ஜாஸ்தி தான்... உங்களை சொல்லலை.. இயற்கையை சொன்னேன்!!

 
At 11:20 AM, Blogger Vaa.Manikandan said...

தமிழே உலகின் மொழியாக இருந்துட்டு போகட்டுமே!

 
At 12:02 PM, Blogger வீ. எம் said...

நெல நாட்டினது யாருங்கோ???

 
At 12:21 PM, Anonymous Anonymous said...

இதில் என்ன கேலியும் கூத்தும் இருக்கிறது.
ஸ்மஸ்கிருதம்னு போட்டுல்லாமா?
better change your looking glasses

 
At 1:15 PM, Blogger sanjeeth said...

அன்புள்ள anonymous,
என் மேல் அக்கறைக் கொண்டு கண்ணாடியை மாற்றச் சொன்னதற்கு மிக்க நன்றி
1. சுவருகளில் கிருக்குவது மிகவும் தவறு. என் அப்பாவைக் கேட்டால் சொல்வார்.கஷ்டப் பட்டு கட்டிய வீட்டை ஓவியங்கள் என்ற பெயரில் நாசமாக்கினேன். :(
2. ரெசிடன்சி சாலை இருப்பது பெங்களூரில்.பெங்களூர் தமிழ் நாட்டில் இல்லை .
3.>> ஸ்மஸ்கிருதம்னு >>போட்டுல்லாமா?
இது போன்ற jingoistic விவாதங்களுக்கு நான் ஆளில்லை
4. தமிழ் பழமையான மொழி(recorded) என்பது அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மை. அதனை யாரும் விவாதிக்கவில்லை.

 
At 9:20 PM, Blogger Boston Bala said...

Whose eyes you were avoiding by looking at the walls ;;-)

 
At 11:57 AM, Anonymous Anonymous said...

இருங்க, உங்கள ராமதாஸ் கிட்ட புடிச்சுக் கொடுக்கறேன்

 

Post a Comment

<< Home

Powered by Blogger