Friday, June 24, 2005

அன்னியனும் Chaos Theory-யும்

anniyan-chaos
நேற்று PVR, இப்பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதற்கு அடுத்து, என் வாழ்வின் மிக முக்கியமான கேள்விக்கு விடை அளித்துவிட்டது. பெரிய பட்ஜட், ஷங்கரின் comeback movie, விக்ரமின் பல கெட்-அப்புகள், sci-fi த்ரில்லர் என்ற வதந்தி, இதற்கிடையில் அன்னியன் chaos theory அடிப்படையில் அமைந்தது என்ற சுஜாதாவின் கட்டுரை என எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "அன்னியனில் என்ன தான் இருக்கிறது" என்ற கேள்விக்கு மூன்று மணிநேரத்தில் விடை ிடைத்துவிட்டது. இது sci-fi த்ரில்லரா இல்லையா என்பதைச் சொல்லி எந்த spoiler-உம் கொடுக்க விரும்பவில்லை. மற்றபடி இது ஷங்கரின் "mega comeback"! விக்ரம் மிரள வைக்கும் நடிப்புடன் அசத்தியிருக்கிறார். இது முழுக்க முழுக்க விக்ரம் திரைப்படம் என்று கண்டிப்பாக எழுதப் படும். என்னைப் பொருத்தவரை இப்படத்தின் உண்மையான நாயகன் ஷங்கர் தான்.

அவரது பிரமாண்டமான கற்பனைகளை அற்புதமாக காட்சி அமைத்திருக்கிறார். உலக சினிமா,உன்னத சினிமா என்று சொல்லிக் கொண்டிருக்கும் purists எல்லாம் இப்படத்தில் உள்ள logic மீறல்களை சுட்டிக் காட்டி "வழக்கம் போல்" என்று முத்திரை குத்தி ஒதிக்கி வைத்து விடுவார்கள். அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு படத்தை ஒரு முறை பாருங்கள். இது "Beautiful Mind" போன்றோ "Johnny got his gun" (போரின் கொடுமையை விளக்கும் அற்புத படம். மனதை பல நாள் கணமாக்கியது) போன்றோ பார்க்கவோ விமர்சிக்க வேண்டிய படம் கிடையாது. இது Spiderman, Mask, Batman வகையை சேர்ந்தது. ஒரு அசாத்திய சக்தி வாய்ந்த Superhero போன்ற கதாபாத்திரம் தமிழ் சினிமாவுக்கு புதியது . அதுவும், அம்மனின் சூரசம்ஹாரங்களில் மட்டும் special effects என்ற பெயரில் கை கால்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வில்லனின் உருமாற்ற்ங்களுக்கும் பயன்படுத்தப் பட்டு வந்த தமிழ் பட graphics-க்கு இப்படத்தில் புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் சின்னச் சின்ன technical விஷயங்களைக் கூர்ந்து கவனிப்பவராக இருந்தால் உங்களுக்கு செம தீனி (உதாரணத்திற்கு சண்டைக் காட்சி ஒன்றில் விக்ரம் அசாத்தியமான வேகத்தில் நகர்வார், ஆனால் அடிவாங்குபவர்கள் இயல்பாக ் நகர்ந்து கொண்டிருப்பார்கள்). Spiderman போன்ற பிரமாண்டமான படங்கள் தமிழில் ஏன் இல்லை என்று வருத்தம் கொண்டவராக இருந்தால், அன்னியன் உங்களுக்காகவே.

மறந்துவிட்டேன்; அன்னியன் சுஜாதா சொன்னது போல் chaos theory-யா என்றால், கண்டிப்பாக இல்லை. Butterfly Effect-இனை அழகாக விளக்கி, எவ்வாறு ஒரு சிறு நிகழ்வு தொடர் விளைவுகளினால், ஒரு பெரிய விளைவினை ஏற்படுத்திகறது என்று விவரித்து அன்னியனும் அதன் அடிப்படையில் கயோஸ் தியரி என்றிருந்தார்.

"Does the Flap of a Butterfly’s Wings in Brazil set off a Tornado in Texas?"

அதாவது ஒரு சிறிய நிகழ்வு உலகளாவிய விளைவினை ஏற்படுத்துவதே chaos theory என்றும், அதன் அடிப்படையில் அன்னியனும் chaos theory என்றும் விளக்கம் அளித்திருந்தார். அந்த தர்க்கத்தின் படி சம்பூர்ண இராமாயணம் முதல் சுள்ளான் வரை கயோஸ் தியரி தான். அடிப்படையில் கயோஸ் தியரியில் சின்ன நிகழ்வு பெரிய விளைவு என்றில்லை. சிறிய மாற்றத்தினால் ஏற்படும் மாற்ற்ங்களை சில அமைப்புகளில் கணிக்க இயலாது, விளைவுகள் கணிக்க முடியாத அளவிற்கு மாறுபடும். i.e Sensitivity of a system to Initial Conditions. உதாரணத்திற்கு, வானிலை மாற்ற கணிப்புகளினைச் சொல்லலாம். அதுவும் அவரது நண்பரின் மரணத்தின் ஆதார காரணத்தை கயோஸ் தியரி அடிப்படையில் அலட்சியம் செய்யக் கூடிய சிறிய சம்பவங்களுக்கு கொண்டு சென்றிருந்தார்( மனைவியுடன் சண்டை). உண்மையில் CT படி ஒரு சிறிய நிகழ்வின் விளைவையோ, ஒரு விளைவின் காரணத்தையோ கணிக்க முடியாது/கடினம். விளக்கப் பட்டது Causality அல்லவா? தமிழ் சினிமாவில் CT அடிப்படையில் அமைந்த திரைப்படம் என்றால் 12B -யினைச் சொல்லலாம்(ஓரளவிற்கு).சிறிய தவறுகளின் பெரிய விளைவுகள் பற்றி சொல்வதனால் "ஒரு வகையினில்" அன்னியனும் CT என்று விவாதிக்கலாம். எப்படியும் இது ஒரு "Neat Hype". அன்னியனுக்கும் ஷங்கருக்கும் நல்லது :)

[CT அடிப்படையில் அமைந்த ஒரு சிறுகதை படிக்க வேண்டும் என்றால் இங்கே செல்லுங்கள்; எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய sci-fi.]

7 Comments:

At 11:24 AM, Blogger Sanjeeth said...

Sorry விஜயகுமார் ஜவகர்லால் and Pandi. had to delete and repost the post because of a blogger goof up.
Anyway here were the comments:)
At 7:34 PM, ???????????.????? said...
விஜயகுமார் ஜவகர்லால்
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.


At 8:22 PM, Anonymous said...
very nice...

please add thamizmanam link and voting pad to your blog... find code here http://www.thamizmanam.com/phpBB2/index.php

Thnaks,
Pandi.

@ விஜயகுமார் ஜவகர்லால் : நன்றி
@ Pandi : Done :)

 
At 11:44 AM, Blogger Admin said...

கஷ்டப்பட்டு அவர்கள் படம் பிடித்து தர விமர்சனம் என்ற போர்வையில் பல விமர்சனங்களில் சங்கரை கஷ்டப்படுத்திவிட்டார்கள். ஆனால் நீங்கள வித்தியாசமாக.

Spiderman பார்த்து விசிலடித்து வரவேற்கும் எம்மவர்கள்,
எம்மவரின் முயற்சிகளை மட்டும் ரணப்படுத்துகின்றார்களே.

 
At 11:07 PM, Blogger Dharumi said...

அவரது பிரமாண்டமான கற்பனைகளை அற்புதமாக காட்சி அமைத்திருக்கிறார்." ---
---ரோடு, பாலம், லாரி பூராவும் பெயிண்ட் அடிப்பதைச் சொல்கிறீர்களா?

"Spiderman பார்த்து விசிலடித்து வரவேற்கும் எம்மவர்கள்,
எம்மவரின் முயற்சிகளை மட்டும் ரணப்படுத்துகின்றார்களே"--
--Spiderman-உம், matrix-உம் ஒரு இலக்கணத்துக்குள் அடங்கும் கதைகள்; நாம் 'மசாலா' என்ற பெயரில் நடைமுறை வாழ்க்கை, அதீத கற்பனைப் படைப்புகள் (நீங்கள் சொல்லும் ஸ்பைடர் மேன் போல்) இரண்டையும் கலக்கும்போதுதான் மூளையை வெளியெ கழற்றிவைக்க மறந்து போன பார்வையாளனை வேதனைப்படுத்துகிறீர்கள்.

 
At 3:57 PM, Anonymous Anonymous said...

Shop at your favorite stores 24 hours a day. Why go to the mall when you can shop online and avoid the traffic

 
At 7:38 AM, Anonymous Anonymous said...

Hello members of throughmylookingglasses.blogspot.com! :)

Two turtles go camping and pack a cooler with sandwiches and beer. After three days of walking, they arrive at a great spot but realize they've forgotten a bottle opener. The first turtle turns to the second and says, "You've gotta go back and get the opener or else we have no beer."

" No way, " says the second. " By the time I get back, you will have eaten all the food. "

" I promise I won't, " says the turtle. " Just hurry! "

Nine full days pass and there's still no sign of the second turtle. Exasperated and starving, the first turtle digs into the sandwiches. Suddenly, the second turtle pops out from behind a rock and yells, " I knew it! I'm not f-cking going! "

signatures:
[url=http://batteries.dlekei.info/battery-battery-dell-laptop.html]battery battery dell laptop[/url]
[url=http://phonecards.dlekei.info/alpha-phonecards.html]alpha phonecards[/url]

 
At 10:39 PM, Blogger livelymommy said...

Idhae varisayil.. have you seen RUN LOLA RUN???

 
At 10:54 PM, Anonymous Anonymous said...

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

 

Post a Comment

<< Home

Powered by Blogger