என் பெயர் சித்ரா
ஆகஸ்ட் 13
என் பெயர் சித்ரா. இன்று என் பன்னிரெண்டாவது பிறந்த நாள். அண்ணன் இந்த டைரியை வாங்கித் தந்தான். இந்த டைரியில் தினம் நான் என்னைப் பற்றி எழுதப் போகிறேன். அண்ணனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவன் சென்னையில் டாக்ஸீ ஓட்டுகிறான். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை என்னை வந்து பார்ப்பான். அவன் டாக்ஸீயில் தான் வருவான். எனக்கு அவன் டாக்ஸீ பிடிக்காது, கருப்பு நிறம்.
ஆகஸ்ட் 14
அண்ணனுக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை. அப்பா நிறைய கெட்ட வார்த்தைகள் பேசுவார். எனக்கு அவரைப் பிடிக்காது. குடித்துவிட்டு அம்மாவை அடிப்பார். இன்றும் அடித்தார். அண்ணன் தடுத்தும் கேட்கவில்லை.அம்மா அழுது கொண்டே இருந்தாள். அண்ணன் மிகவும் கோபமாக டாக்ஸீ எடுத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பி விட்டான். அம்மா அவனுக்காக பாயாசம் செய்திருந்தாள். அவன் அதைக் குடிக்காமலே சென்றுவிட்டான். எனக்கு பாயாசம் பிடிக்காது. நான் கூழ் மட்டும் தான் குடிப்பேன்.
ஆகஸ்ட் 15
இன்றைக்கு பள்ளி விடுமுறை. காலையில் "குட்டி இராஜகுமாரி" படித்தேன்; அண்ணா வாங்கித் தந்தது. நான் அதை எட்டு முறை படித்து விட்டேன். அண்ணா தனியாக இருக்கும் போதெல்லாம் என்னை "குட்டி இராஜகுமாரி" என்று அழைப்பான். எனக்கு வெட்கமாக இருக்கும்.
அப்பா சாயங்காலம் சினிமா கொட்டகையில் "வெற்று பிம்பங்கள்" திரைப்படம் பார்ப்பதற்காக அம்மாவை கிளம்பச் சொன்னார். அம்மா, என்னையும் கூட்டிச் செல்லலாம் என்று கெஞ்சி சம்மதிக்க வைத்தாள். அப்பா வழக்கத்திற்கு மாறாக அவ்வளவாக கோபப் படவில்லை. கொட்டகைக்குள் அப்பா அம்மாவின் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு கோபம் வரவில்லை, சிரித்துக்கொண்டே இருந்தாள். படம் நன்றாகவே இல்லை. படம் முழுக்க சண்டை;இரத்தம். ஏதோ குழந்தை பக்கத்தில் அசிங்கம் செய்துவிட்டது. நாற்றம் அடித்தது. நான் வீட்டுக்குப் போகலாம் என்று அழத் துவங்கி விட்டேன். அதிகமாகவே அழுதேன். மண்ணில் புரண்டு பாவாடை எல்லாம் ஒரே அழுக்கு. அம்மா என்னை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வேகமாக கிளம்பினாள். அப்பா வரவில்லை. கிளம்பும் முன் "சனியனை கூட்டி வர வேண்டாம்னு இதுக்குத் தான் சொன்னேன்" என்று கத்தினார். அப்பா என்னை "சனியன்" என்று தான் அழைப்பார்.
ஆகஸ்ட் 16
இன்று பள்ளியில் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அறிவித்தனர். சரித்திரம், கணிதம், அறிவியல் மூன்றிலும் நல்ல மதிப்பெண்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் குறைவு. அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். இரவில் அப்பாவிடம் சாப்பிடும் போது சொன்னாள். அப்பா அவசரமாக "உம்" கொட்டினார்.
ஆகஸ்ட் 17
இன்று காயத்ரியை அடித்து விட்டேன். அவள் என் தோளில் கைப் போட்டாள். எனக்கு அது பிடிக்காது. ஷாரதா டீச்சர், என்னை மிகவும் கோபமாகத் திட்டினார். எனக்குக் கோபம் கோபமாக வந்தது. வீட்டிற்கு வந்த போது அம்மா குளித்து பொட்டெல்லாம் வைத்து அழகாக இருந்தாள். என்னிடம் "உனக்குத் தம்பி பாப்பா வரப் போறான்" என்று சொல்லி புன்னகைத்தாள். நான் என் பையை தூக்கி எறிந்து கொல்லையில் போய் ஓரமாக உட்கார்ந்துக் கொண்டேன். அம்மாவும் இன்று கோபப் பட்டாள். எனக்கு அழுகை வந்தது. விரல் நகத்தையும் சுற்றி இருந்த சதையையும் கடித்தேன். கோபம் வந்தால் இப்படித் தான் செய்வேன். கை எல்லாம் ஒரே இரத்தம். எனக்கு வலிக்கவே இல்லை. அம்மாவிடம் ஓடினேன். அம்மா பயந்துவிட்டாள். பத்தெல்லாம் வைத்து கட்டு போட்டு விட்டாள். அவளும் அழுதாள்.
ஆகஸ்ட் 18
இன்று பள்ளிக்குப் போகவில்லை. பாலம் உடைந்து விட்டதாம். 2கிமீ. சுற்றிக் கொண்டு தான் போக வேண்டும். எனக்கு அந்த பாதை பிடிக்காது.
இன்று நாள் பூராக படம் வரைந்தேன். அம்மாவின் படம் கூட வரைந்தேன். அம்மாவிடம் காட்டிய பொழுது என்னை அணைத்தாள். அம்மாவுக்கு என்னை மிகவும் பிடிக்கும். எனக்கும் அவளைப் பிடிக்கும். ஆனால் சில சமயங்களிம் எனக்குப் பிடிக்காது. அவள் என்னை அணைத்துக் கொள்வாள். எனக்கு கோபம் வந்து அவளைத் தள்ளி விடுவேன். இன்றும் அப்படித் தான் செய்தேன். அம்மா ஒன்றும் சொல்லவில்லை.
ஆகஸ்ட் 19
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே சண்டை. அப்பா குடித்து விட்டு வந்திருந்தார். அவருடன் வேறு யாரோ வந்திருந்தார். அம்மா ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தாள். நான் அம்மாவின் பக்கத்தில் போய் நின்று கொண்டேன். "இந்த சனியன் நமக்கு வேண்டாமடீ" என்று என்னைப் பார்த்துக் கத்தினார். எனக்கு ஒன்றும் புரியவே இல்லை.
ஆகஸ்ட் 20
இன்றும் பள்ளிக்குப் போகவில்லை. பாலம் சரியாக இன்னும் 4 நாட்களாகும். நான் டைரியைப் படித்துக் கொண்டிருதேன். அம்மா என்னைப் பின்னால் இருந்து அணைத்தாள். எனக்குக் கோபம் வந்தது. ஆனால் அம்மா அழுது கொண்டிருந்தாள். எனக்கு பயமாக இருந்தது. "உனக்கு இனிமே இந்த டைரி, ஸ்கூலு எதுவும் கிடையாது சித்ரா. உங்கப்பன் உன் வாழ்க்கையே பாழாக்கப் போறான்.சண்டாளப் பாவி. அந்த பாவிமவன் உன்ன உங்க சித்தப்பன் கிட்ட அனுப்பப் போரானாம். 2000 ரூபாய்க்கு என் உசுரையே வித்துட்டான் . வேற எதாவது ஊருக்கு கூட்டிப் போய் உன்ன பிச்சை எடுக்க விட்டுடுவான்டீ அவன். உங்க அண்ணகிட்ட விட்டுடலாம்னாலும் கேட்க மாட்டேங்கிறான் இந்த மனுஷன். 2000 ரூபாய் அவனா தருவான் -ங்குறான் இந்த கிருக்கன்.உங்க அண்ணன் எங்குப் போய்த் தொலஞ்சானோ. உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னு சொன்னா இந்த ஆள் கேட்க மாட்டேங்குறான். நீ வேற அப்பப்போ ஏதாவது கிறுக்குத் தனம் பண்ணிட்டு வந்து நிக்கற. இங்கேந்து தப்பிச்சு போய்டு. எங்கேயாவது ஓடிப் போய்டுடீ." பிறகு ஏதொ கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி எங்கப்பாவையும் சித்தப்பாவையும் திட்டினார். நாளை என்னைக் கூட்டிச் சென்று விடுவார்களாம். எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் கொல்லப் புறத்தில் அமர்ந்து அழுதுக் கொண்டே இருந்தேன். அம்மா அழுது கொண்டே வெளியே எங்கோ சென்றாள். எனக்கு அண்ணா ஞாபகம் வந்தது. நாளை முதல் நான் பிச்சை எடுக்கப் போகிறேன், அண்ணா.
இந்த டைரியை நான் கொல்லைப் புறத்தில் புதைக்கப் போகிறேன். இதில் கடைசிப் பக்கத்தில் என் அண்ணாவின் விலாசம் இருக்கிறது. யாராவது இதைப் பார்த்தாள் அவனிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் "குட்டி இராஜகுமாரி" படித்துவிட்டுத் தூங்கப் போகிறேன்.
ஆகஸ்ட் 21
அம்மா விஷத்தைக் குடித்துவிட்டாள். ஒரே அழுகைச் சத்தம். நானும் அழுதேன். அப்பா - "ரெண்டு உசுருடீ, இப்படி பழி வாங்கிட்டியே!" என்று அழுது கொண்டே அம்மாவின் நெஞ்சில் உதைத்தார். அம்மாவுக்கு வலித்திருக்காது. அப்பா என் தலையை சுவற்றில் மோதினார். எனக்கும் வலிக்கவில்லை. சித்தப்பாவும் அங்கிருந்தார். நான் கொல்லையில ஒளிந்து கொண்டேன். ஒரு மணி நேரம் கழித்து கார் சத்தம் கேட்டது. பிறகு அங்கேயே தூங்கிவிட்டேன்.
சாயங்காலம் அண்ணன் தான் என்னைத் தட்டி எழுப்பினான். அண்ணன் கண்ணெல்லாம் சிவந்திருந்தது. நான் அவனைப் பார்த்தவுடன் அழத் துவங்கிவிட்டேன். அவன் என்னை அவனுடன் கூட்டிச் செல்வதாகச் சொன்னான். எனக்கு ஒரே சந்தோஷம். அவனுக்கு டைரியைப் புதைத்த இடத்தை காண்பித்தேன். அவன் தோண்டி எடுத்தான்; டைரி முழுக்க மண். நான் எழுதியதை எல்லாம் அவனுக்குக் காட்டினேன். அவனுக்கு அப்பா மீது பயங்கரக் கோபம். அப்பாவை கண்ணத்தில் அறைந்தான். ரூபாய் நோட்டெல்லாம் அவர் முகத்தில் எரிந்தான். அப்பா அவற்றை எடுத்துக் கொள்ளவில்லை. அண்ணா என்னை அவன் டாக்ஸீயில் சென்னைக்குக் கூட்டி வந்துவிட்டான். எனக்கு சோகமாக இருக்கிறது. அண்ணன் தங்கி இருக்கும் அறை எங்கள் வீட்டை விடச் சிறியது.
ஆகஸ்ட் 22
அண்ணா என்னை டாக்டரிடம் கூட்டிச் சென்றான். எனக்கு காய்ச்சல் எதுவும் இல்லை என்றேன். அவன் கேட்கவே இல்லை. எனக்கு கோபம் வந்தது, அம்மா ஞாபகம் வந்தது.
எனக்கு டாக்டரை மிகவும் பிடித்திருந்தது. என்னைப் படமெல்லாம் வரையச் சொன்னார். நான் அண்ணாவை மொட்டையுடன் வரைந்தேன். அவர் சிரித்தார். நானும் சிரித்தேன். அப்பாவும் அண்ணனும் நேற்று மொட்டை அடித்திருந்தார்கள். திரும்பி போகும் வழியில் என்னை நாளை பள்ளியில் சேர்க்கப் போவதாகச் சொன்னான். நான் சந்தோஷத்தில் கத்தினேன். அண்ணன் சத்தமாக சிரித்தான்.
ஆகஸ்ட் 25
என் பள்ளியின் பெயர் "Leo Karner Institute for Children with Special Needs". இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என்னைத் தவிர இன்னும் ஒரே ஒரு பெண் தான்- ஜோசஃபீன். ஜோசஃபீனுக்கு இறுக அணைத்தால் பிடிக்கும். சந்திரா டீச்சர் அவள் அழும் போதெல்லாம் இறுக அணைத்துக் கொள்வார். நான் ஜோசஃபீன் அழுவது போல் படம் வரைந்தேன். அவளுக்கு கோபம் வந்து விட்டது. இங்கு நான் நிறைய படங்கள் வரைகிறேன். நான் நன்றாக வரைவதாக சந்திரா டீச்சர் சொல்கிறார். அண்ணனும் நான் பெரிய ஓவியனாக வருவேன் என்று சொல்கிறான். நான் வரைந்த படத்தை வரவேற்பரையில் மாட்டி உள்ளனர் - என் அம்மா எனக்கு ஊட்டி விடும் படம். படத்தின் ஓரத்தில் என் கையெழுத்து கூட இருக்கிறது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
-சஞ்சீத்
Related Article By Srikanth Meenakshi- http://kurangu.blogspot.com/2005/08/autism-3.html
67 Comments:
கண்களில் நீர்த்திரையிட்டதால், கடைசி பாராவை ஒழுங்காகப் படிக்க முடியவில்லை.
grt sanjeeth.. grt!!
என்னங்க சஞ்ஜீத்,
மனசுக்கு சோகமாப் பண்ணிட்டீங்களே.
என்றும் அன்புடன்,
துளசி.
//மனசுக்கு சோகமாப் பண்ணிட்டீங்களே// agree.
:O(
very very touching..
changed my mood of the day!
மனதைப் பிழியவைத்த சோகம். யதார்த்தமான கதை. இன்றளவும் நடந்துகொண்டுதான் உள்ளன இம்மாதிரி.
Beautiful! reminded me of the movie "kutti"...
I love ur choice of names... chitra, vetru bimbangal, kutti rajakumari... each one is more than jus a name... arpudham!
Style of writing-ku idhu oru nalla experiment... using minimal words and getting into the mind of a 12 yr old... and u succeed brilliantly..:)
jus one q... till the end, the kid seems to be normal only... so why is she admitted in a special school? am i missing something?
icarus, raasa,
Thanks
துளசி,ஷ்ரேயா, சுரேஷ்
உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.
இது சற்று சோகமான கதை தான், ஆனால் நம்பிக்கையூட்டும் விதத்தில முடிக்க முயற்சித்திருக்கிறேன், முக்கியமாக "யதார்த்தமான நம்பிக்கை".
Nithya,
>>am i missing something?
almost everything ;)
1)எனக்கு அவன் டாக்ஸீ பிடிக்காது, கருப்பு நிறம்.
2)எனக்கு பாயாசம் பிடிக்காது. நான் கூழ் மட்டும் தான் குடிப்பேன்.
3)இன்று காயத்ரியை அடித்து விட்டேன். அவள் என் தோளில் கைப் போட்டாள். எனக்கு அது பிடிக்காது.
4)விரல் நகத்தையும் சுற்றி இருந்த சதையையும் கடித்தேன். கோபம் வந்தால் இப்படித் தான் செய்வேன். கை எல்லாம் ஒரே இரத்தம். எனக்கு வலிக்கவே இல்லை.
5)இன்று பள்ளிக்குப் போகவில்லை. பாலம் உடைந்து விட்டதாம். 2கிமீ. சுற்றிக் கொண்டு தான் போக வேண்டும். எனக்கு அந்த பாதை பிடிக்காது.
6)ஆனால் சில சமயங்களிம் எனக்குப் பிடிக்காது. அவள் என்னை அணைத்துக் கொள்வாள். எனக்கு கோபம் வந்து அவளைத் தள்ளி விடுவேன்.
7) ஜோசஃபீனுக்கு இறுக அணைத்தால் பிடிக்கும்.
ம்ம்ம்..பாதி கதை இங்கயே! கடைசில ஒரு related link இருக்கே, அதை கவனிக்கவில்லையா?
that was fast! I was jus going thru that link and relating to this... adhukkulla reply pottadhukku thanks:)
Wasnt aware of those symptoms!
சஞ்ஜீத், மனதை தொடும் விதமா எழுதியிருக்கீங்க.
சஞ்ஜீத்,
மனதை மிகவும் பற்றிய கதை. மதியிறுக்கம் உள்ள குழந்தையின் கண்ணால் உலகைப் பார்ப்பது கடினம். அம்மாதிரிக் குழந்தையைப் புரிந்து கொண்ட மக்கள், முக்கியமாக பெற்றோர், படும் அவஸ்தையை வார்த்தையால் கூற முடியாது. இது போன்ற எல்லாக் குழந்தைகளுக்கும் புரிந்து கொண்ட பெற்றோர் கிடைப்பதில்லை என்பது தான் மிகவும் வேதனையான விஷயம். இது போன்ற குழந்தையையோ, அல்லது அனுபவிக்கும் குடும்பத்தையோ பார்த்திராதவர்களுக்கு இதன் தாக்கம் புரியாது. எனக்கு உங்கள் டைரியின் முடிவு மிகவும் பிடித்தது - இது ஒரு நோய்; குணப்படுத்த முடியும் என்பது தான் முக்கியம்.
சஞ்ஜீத்... நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.. ஆகஸ்ட் 20 படித்த போது கலங்கிவிட்டேன்... நம்பிக்கையுடன் கதையை முடித்ததற்கு நன்றி
ரொம்ப அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்; கஷ்டமாக இருந்தது.
என் பெயர் சித்ரா இந்திய கோணத்தில் மதியிறுக்கத்தின் பாதிப்பினை விளக்கும் நெகிழ்ச்சியான கதை. வறுமையும் அறியாமையும் மிகுந்த சூழல், இதனிடையே - அந்த பிஞ்சு குழந்தையின் பாதிப்பு நெஞ்சைத் தொடுகிறது. கதையின் நம்பிக்கையான முடிவு பாராட்டிற்குரியது. படம், இயல்பான மொழி நடை சித்ராவினை கண்முன் நிறுத்தி கண்களை குளமாக்குகின்றது. அனைவரும் படிக்க வேண்டிய கதை. (கதையெங்கும் மெலிதாகக் குறிப்பிடப்பட்ட அறிகுறிகளை எடுத்து பின்னூட்டத்தில் தனியாக வெளியிட்டதற்கு நன்றி. அனைவரும் இந்த நோயைப் பற்றி புரிந்து கொள்ள உதவும்.)
-Vinodh
http://visai.blogspot.com
Looking the world through the eyes of a 12 year old mentally affected girl child is a bit difficult task.But you have neatly and brilliantly penned it.Great imaginiation and good style of writing.
The way she longs for mother's love is well expressed in last few lines.."நான் வரைந்த படத்தை வரவேற்பரையில் மாட்டி உள்ளனர் - என் அம்மா எனக்கு ஊட்டி விடும் படம்.”
Soga-mana kadhai yaga erundhalum..nambikai –ootum kadhai.
This story also leaves a note that with good guidance and encouragement , the latent talents of these children can be unveiled and they also can come up in life.” அண்ணனும் நான் பெரிய ஓவியனாக வருவேன் என்று சொல்கிறான்”
“நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.” endru positive-aga kadhai-yai mudithirupathu migavum nantru.
அருமையான கதை என்று வார்த்தைகளால் கூறி இதன் சிறப்பை குறைக்கப் போவதில்லை. இந்திய சூழலில் autism பற்றி படம்பிடித்துக் காட்டியதற்கு மிக்க நன்றி.
Autsim பற்றிய விழிப்புணர்ச்சி நம்மூரில் குறைவாக இருக்கும் நேரத்தில், இதைப் போல கதைகள் மூலம் சுவாரஸ்யமாக விளங்க வைப்பது, மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.
இக்கதை உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், இந்த ஆங்கில நாவலையும் (The Curious Incident of the Dog in the Night-Time) படிக்க வேண்டும். மேற்கத்திய சூழலில், autism பாதித்த ஒரு சிறுவனின் வாழ்க்கை நெகிழ்ச்சியாகவும், மிக்க சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கும்.
இன்னொரு தகவல் : ராஜேந்திரன் நடத்தும் ஜாம்பவ் என்ற நிறுவனம், இதைப் போலவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், autism பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உதவுவதற்காக மென்பொருள் செய்கின்றது.
@ramya,இராதாகிருஷ்ணன்
Thanks :-)
@ranga,முகமூடி And
>>“நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.” endru >>positive-aga kadhai-yai >>mudithirupathu migavum nantru.
நன்றி. கதையை வேறெப்படியும் முடிக்க மனம் வரவில்லை. யோசிக்கக் கூட இல்லை
@Vinodh
>>இந்திய கோணத்தில் மதியிறுக்கத்தின் பாதிப்பினை >>விளக்கும் நெகிழ்ச்சியான கதை. வறுமையும் >>அறியாமையும் மிகுந்த சூழல்,
மெலிதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இது தான் இக்கதையின் கரு!Thanks
@Santhosh,
"The Curious Incident of the Dog in the Night-Time"என்னை மிகவும் பாதித்த நாவல். Christopher உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்து வருவதாக தான் நினைத்து வருகிறேன்.
it is a nice story. In US, we offer free treatments and schooling for children with autism an dhelp with nurses at home to give free time for parents.It is one o fthe many things we do with tax money. I have seen some of them.I wish India offers such free programs. The reason for me to write that is to let some readers know that we can all campaign for such programs with Indian government.
I liked the story and the way you chose to write it thorugh the girl was very apt.
அருமையான உருக்கமான கதை.
மதியிறுக்கம் (மறுமொழிகளின் மூலம் நான் கற்றது) என்ற உளவியல் நோயின் (?) அறிகுறிகளை இந்திய சூழலில் அருமையாகவும் வெகு இயல்பாகவும் கூறியிருக்கிறாய். மதியிறுக்கம் என்னைப் பொருத்த வரை ஒரு நோயில்லை என்றே தோன்றுகிறது.
From what I see, sub-optimality hurts them, which would be simply more idealistic than the rest of the humans have caught up.
Sundar
சஞ்சீத், உருக்கமான கதை. சொல்லியிருக்கும் விதமும் அருமை. மறுமொழிகளைப் படிக்கும் வரையில் நானும் மதியிருக்கம் பற்றிச் சொல்லியிருப்பதை உணரவில்லை.
சஞ்ஜித் கதை நன்றாக உள்ளது
வெற்றி பெற வாழ்த்துக்கள்
Great Sanjeeth. Using Dairy to narrate the story is innovative.
- Suresh
சுந்தர் சொல்வது சரி என்றே சில சமயம் தோன்றுகிறது. மதியிறுக்கம் இருக்கும் ஒரு குழந்தையின் தாயின் பார்வையிலிருந்து ஒரு கதை எழுதினேன். அதுக்கு இணையத்தில் இதைப் பற்றி நிறைய படித்தேன். இந்த நிலை இருக்கும் ஒருவர் தன் இணைய தளத்தில் கூறியிருந்தார், 'நீங்கள் எல்லோரும் ஏன் எங்களுக்கு ஏதோ வியாதி இருக்கிறது அதை 'குணப்படுத்த' வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு அலைகிறீர்கள். It is just a condition. Accept it,' என்று.
அம்மா அழுது கொண்டே வெளியே எங்கோ சென்றாள். எனக்கு அண்ணா ஞாபகம் வந்தது. நாளை முதல் நான் பிச்சை எடுக்கப் போகிறேன், அண்ணா.
இந்த டைரியை நான் கொல்லைப் புறத்தில் புதைக்கப் போகிறேன். இதில் கடைசிப் பக்கத்தில் என் அண்ணாவின் விலாசம் இருக்கிறது. யாராவது இதைப் பார்த்தாள் அவனிடம் ஒப்படைத்து விடுங்கள். நான் "குட்டி இராஜகுமாரி" படித்துவிட்டுத் தூங்கப் போகிறேன்."
கண்களில் நீர் கசிய வைத்த வரிகள், எங்கேயோ சென்று விட்டீர்கள் சஞ்சீத், எவ்வளவு அற்புதமான நடை, ஆஹா, தமிழில் கதாசிரியர்கள் குறைந்துவிட்டார்கள் என்றல்லவா எண்ணியிருந்தேன்? குமுதம், விகடனைப்படித்து???? இப்பொழுதல்லவா தெரிகிறது? எல்லோரும் இணையத்தினுள் உலாவரும் ஒளிக்கதிர்களாக உலவிக்கொண்டிருப்பது....தங்களின் வலைப்பூவை என் புக்மார்க்கில் சேர்த்துவிட்டேன், தங்களுக்கு ஒரு செய்தி, என் புக்மார்க்கில் நான் சேர்த்த முதல் வலைப்பூ உங்களுடையதுதான்....:)
வாழ்க வளமுடன்,
ஸ்ரீஷிவ்...
அழவைத்த உங்களுக்கு ஒரு சல்யூட்
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
Dear Sanjeeth,
This is a REAL CLASSIC ! There cannot be a soul unmoved by your story.
இப்போது தூங்கச் செல்ல முடியாது போலிருக்கிறது !!!
Hats off !
வழக்கத்திலிருந்து வித்யாசமான உத்தியை சிறப்பாக கையாண்டிருக்கிறீர்கள். Autism உள்ள குழந்தையை(களை) மிக அருகே தினமும் பார்க்கும் எனக்கு "டைரி எழுதும்" சித்ரா ஒரு மிகையான கற்பனை என்றாலும் இதன் மூலம் இந்த குறைபாடு உள்ளவர்களிடத்தில் இருக்கக்கூடிய அறிகுறிகளை ஆங்காங்கே வெளிப்படுத்தியுள்ள விதம் அருமை. இன்றளவும் நம்பிக்கையே இந்த குறைபாட்டின் ஒரே சிகிச்சை, கதையின் முடிவில் அது அழகாகவெளிப்படுகிறது. வாழ்த்துக்கள் சஞ்ஜீத்.
Came to know abt this story thru Mugamoodi post and Srikanth's article. Nicely written..!
பின்னூட்டங்களுக்கும், அனைவர் அளித்த ஊக்கத்திற்கும் மிக்க நன்றி :)
@sundar,
Not sure what you mean by "sub-optimality hurts them" here :(
@தேன் துளி
நல்ல யோசனை. அதனுடன் இங்கு இதனைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் . இங்கு இதனைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு :(
@Ramya Nageswaran
கண்டிப்பாக அவர் சொன்னது போல் இது ஒரு condition.அவர்கள் இதனை accept செய்வது போல் நாமும் இதனை accept செய்ய வேண்டும்.
இக்கதையை எழுதும் முன் சில வலைத் தளங்களிலும் , சில "autism related forum" -களிலும் இதனை பற்றிய தகவல் சேகரித்தேன். அதில் இவர்களுக்கு சில "புரிந்து கொள்வதற்கு கடினமான", சில பிரத்யேக குணங்கள் இருக்கின்றன.
உதாரணத்திற்கு:
ஒரு குழந்தை தான் வைத்திருக்கும் ஃபோட்டோவை பிறருக்கு காட்டும் பொழுது, ஃபோட்டோவின் பின் புறத்தைக் காண்பிக்கின்றது. காரணம் என்னவெனில், the child can view the picture but does not realize that the other child has a different perspective or point of view.
இது போன்ற விஷயங்களை நாம் புரிந்து கொள்வது மிகவும் கடினம். What we need is an awareness to accept these conditions என்று எனக்குத் தோன்றுகிறது
@srishiv
உங்கள் பின்னூட்டத்திற்கு என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை! பாராட்டிற்கு மிக்க நன்றி. உங்களது எதிர்ப்பார்ப்பினை பூர்த்தி செய்ய கண்டிப்பாக முயற்சிக்கிறேன் :)
@சுரேஷ் (KIWI)
மிகவும் நன்றி
கண்ணிகள் தன்னை அறியாமலே கலங்கிவிட்டது. குட்டி ராஜகுமாரியின் கதை சொன்ன விதம் அழகு. மனதை கனக்க வைத்துவிட்டது. ஒரு குழந்தை நோகவில்லை என்று சொல்லுதென்றா சாதாரனமான விடயம் இல்லை அழகாய் சொன்னீர்கள். தொடருங்கள்.
ம்ம்...
என்ன சொல்வதென்று புரியவில்லை...
நன்று, மிக நன்று!
@Sanjeeth:I'd observed from what you've written here and from what I've heard in the past that they remain focused and dislike distractions. Also, you'd mentioned that the child doesn't want to take the longer route to her school etc., That's why I made the remark about "sub-optimality". However, Santhosh told me offline that these obsessions may vary between children. Perhaps mine was a faulty generation. I need to read the book "The curious incident of the dog ...".
sanjeeth,
nicely written. very touching.
i have included in my "paditheen rasitheen" section in my blog.
- desikan
www.desikan.com/blogcms/
BEING A MEDICAL PERSONNEL I WONDERDED,HOW COULD IT BECOME POSSIBLE TO U TO BRING A IMAGE OF AN AUTISTIC CHILD,?HATS OFF SANJEETH!!
பாசாங்கில்லாத அக்கறையுடன் அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் சஞ்சித் !
தேசிகன் அவர்களே,
சுட்டிக்கு மிக்க நன்றி.
@Lavanya, சோம்பேறி பையன்
நன்றி :)
very nicely written story.
கண்களில் நீர்த்திரையிட்டதால், கடைசி பாராவை ஒழுங்காகப் படிக்க முடியவில்லை.
good story.
Murali
hi its superb desikan..kalaakal..i wanna read stories like these...keep it up
This comment has been removed by a blog administrator.
Hi Sanjeeth,
unakku kandippa yenna niyabagam irukanum.... Irukum! college-la yenakku kidaicha miga periya parattu nee yenakku kudutha Bday card-la yezhuthiiruntha lines = "I envy you..." I still have that!
Chitra - I dont know why you like this name a lot. In culturals, I have seen you using this name a lot...
என் பெயர் சித்ரா - chance-a illatha oru arputha padaippu... I have felt many times in college and still i feel the same after going through many of your writings in your blog - You should not have come to IT industry... Arts and Dramatics is something you should have thought about again!
Great to read many of your stuff... Again and again
- Vadivel (tsvadivel@yahoo.com)
[B]NZBsRus.com[/B]
Forget Crawling Downloads Using NZB Downloads You Can Rapidly Search Movies, Console Games, MP3 Singles, Applications & Download Them at Flying Speeds
[URL=http://www.nzbsrus.com][B]Newsgroup[/B][/URL]
எமது வேதனையைக் கண்டோம், அழுது தீரவில்லை.
எமது வேதனையைக் கண்டோம், அழுது தீரவில்லை.
buy tramadol overnight delivery reputable online pharmacy tramadol - online pharmacy tramadol cheap
buy phentermine buy phentermine london - order phentermine uk
viagra online pfizer viagra dosage - buy viagra online india
order soma soma lofts for sale san francisco - soma back pain medication
buy cialis online buy cialis montreal - cheap cialis one a day
generic cialis online pharmacy usa generic cialis - buy cialis online cheap
buy tramadol online where can i buy cheap tramadol - buy tramadol us pharmacy
xanax online generic term xanax - order xanax online free consultation
xanax no prescription online xanax withdrawal vs klonopin withdrawal - xanax generic 027
cialis online cheapest cialis online usa - cialis online best price
buy cialis daily cialis online doctor - buy cheap viagra and cialis
buy cialis online buy generic cialis online - cialis online western union
tadalafil tablets cialis retail cost - cialis 20 mg effects
buy tramadol where to buy tramadol online legal - tramadol jitters
[url=http://buydiazepamshop.webs.com/]diazepam purchase uk[/url]
[url=http://www.formspring.me/bestsale]buy diazepam tablets online[/url]
[url=http://dazepam.freeforums.org/]buy diazepam diazepam tablets[/url]
[url=http://bbs.chinadaily.com.cn/thread-831218-1-1.html]buy roche diazepam 10mg[/url]
[url=https://ru.gravatar.com/diazepamshop]buy diazepam canada[/url]
[url=http://www.jetphotos.net/members/viewprofile.php?id=67498]can you buy diazepam in dubai[/url]
[url=http://www.formspring.me/hmarket]can you buy lorazepam in spain[/url]
[url=http://www.formspring.me/fshop]buy nitrazepam uk online[/url]
[url=http://www.formspring.me/nmarket]buy prozac for cats[/url]
http://www.integrativeonc.org/adminsio/buyklonopinonline/#cheap death from klonopin overdose - dosage of klonopin for dogs
klonopin online no prescription overnight klonopin side effects drinking - klonopin long term effects
[url=http://www.formspring.me/sjshop]buy amlodipine 5mg tablets[/url] order amlodipine [url=http://www.formspring.me/hjshop]buy ibuprofen singapore[/url] purchase ibuprofen cream [url=http://www.formspring.me/kmarket]buy ultracod online[/url] buy ultracod online [url=http://www.formspring.me/hshop]buy dihydrocodeine topix[/url] buy dihydrocodeine in uk [url=http://www.formspring.me/llshop]buy dextropropoxyphene paracetamol[/url] buy paracetamol [url=http://www.formspring.me/xcshop]buy azur online[/url] buy azur online [url=http://www.formspring.me/kshop]buy tramadol online us pharmacy[/url] buy generic tramadol uk [url=http://www.formspring.me/dshop]can you purchase codeine[/url] buy codeine legally
buy tramadol tablets can you legally buy tramadol - order tramadol online 100mg
klonopin online buy klonopin clonazepam - how to get klonopin out of your system
www.epharmarx.com/kamagra-soft-tabs
Super thala
.....
Post a Comment
<< Home