Wednesday, July 28, 2004

விடப்பட்ட வார்த்தைகள்

பாரதி திரைப்படத்தில் , நிற்பதுவே நடப்பதுவே  என்று இளையராஜாவின் அற்புதமான இசையில்,  ஹரீஷ் ராகவேந்திராவின் குரலில்,  ஷாயாஜி ஷிண்டேவாக  பாரதியாக  சோலையிலும் அருவியிலும்  நின்று மெய்மறந்து பாடுவார். (தயவு செய்து இந்த படத்துக்கு lyrics யாருன்னு கேட்டுடாதீங்க !!!) . பார்ப்பதெல்லாம் மாயை என்று எவ்வளவு அழகாக சொல்கிறார் என்று  வியந்தேன், வியந்திருந்தேன்.  நேற்று  சந்தோஷ்  எனக்கு பரிசளித்த "பாரதியார் கவிதைகள்", புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த போது, திரைப்படத்தில் இடம்பெறாத கடைசி  ஐந்து வரிகள் ஒரு இன்ப அதிர்ச்சியினை அளித்தது.

சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ?வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லைகாண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்

காண்பதை அன்றி வேறொன்றும் இல்லை என்பதுதான் இப்பாடலின் முழு அர்த்தம். எனவே "காட்சிப் பிழை" என்று நம்பியவர்கள் திருத்திக்கொள்ளவும்.

"என்ன அய்யரே, தமிழ் சினிமால தான் இரண்டு மணி நேரம் எதாவது சொல்லிட்டு, கடைசில அரைமணி நேரம் அதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்றாங்கோ, நீருமா ? " என்றெல்லாம் கேட்கக் கூடாது. தலைவர் சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்.



Saturday, July 24, 2004

அவள் - சற்றே சிறிய சிறுகதை

காலை ஆறு மணி ஆகிவிட்டது, இன்னும் சுசீலா வீடு திரும்ப வில்லை. "வழக்கமாக ஐந்து மணிக்கே திரும்பி விடுவாளே " என்று முணுமுணுத்துக்  கொண்டே கவலையுடன் வாசலில் நின்றுக் கொண்டிருந்தான். "என்னப்பா இன்னும் அம்மா ஆஃபிஸிலிருந்து வரலயா", என்றூ ஆனந்த் கண்ணைக்
கசக்கிக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்துவந்தான்.

"இல்லடா கண்ணா, நீ போய் ப்ரஷ் பண்ணு, நான் உனக்கு போர்ன்விட்டா போட்டு எடுத்து வரேன்"

"போர்ன்விட்டாவா ? நான் ஹார்லிக்ஸ்தான் குடிப்பேன். உனக்கு ஒன்னும் தெரியலப்பா" என்று சொல்லிவிட்டு கிண்டலாக சிரித்துக்கொண்டே
பாத்ரூமுக்குள் ஓடினான். கொஞ்சம் சங்கடமாகத்தான் ரமேஷுக்கு இருந்தது. அதே சமயம் மனைவியை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது.

"இரவிலும் வேலை செய்து விட்டு, பகலிலும் ஒய்வெடுக்காமல் எனக்கு பணிவிடைகள் செய்து, ஆனந்தை ஸ்கூலுக்கு கிளப்பி, எவ்வளவு நல்லா
குடும்பத்தை நிர்வாகம் செய்ரா. வேலைக்கு போக வேண்டாமுன்னு சொல்ல முடியல, ஆனந்தாவது நல்ல படிக்கணும். பாவம் சுசீலா".

"என்னங்க ரொம்ப யோசனையில இருக்கீங்க ?" என்று சுசீலா, ரமேஷின் தோளில் தட்டி அவனை கவலைகளின் பிடியில் இருந்து விடுவித்தாள்.

"ஏன் சுசி, இவ்வளவு லேட்டு. நான் ரொம்ப பயந்துட்டேன்"

"என்ன பயம் ? எனக்கு என்ன இது புதுசா.. பட் இந்த ஆம்பிளைங்க இருக்காங்க பாரு...ஷாவனிஸ்ட்ஸ். காண்டம் யூஸ் பண்ணு எத்தனை விள்ம்பரம் போடரான். தான் சொல்றது தான் சட்டம். சீக்கிரம் போனும்னாலும் கேட்க மாட்டங்க"

"ஷ்ஷ்...சுசி....மெதுவா பேசு, ஆனந்த் முழுச்சிட்டான். நீ போய் தூங்கு இன்னைக்கி. நானும் ஆனந்தும் ஹோட்டல்ல சாப்டுக்குரோம். அப்படியே
அவனை ஸ்கூல்ல விட்டுடுறேன்" என்று சொல்லி அவள் நெத்தியில் ஓர் முத்தமிட்டான்.

Tuesday, July 20, 2004

இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக


nila_kaalam 
"இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்றெல்லாம் விளம்பரப்படுத்தாமல் வியாழன் இரவு 8:30 மணிக்கு கே.டிவி யில் ஒளிபரப்பப்பட்ட திரைப்படம் "நிலாக் காலம்". எப்படியோ என் அம்மாவை "மெட்டி ஒலி"யில் இருந்து திசைத்திருப்பி, முழு படத்தையும் பார்த்தேன். பல நாட்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி எனக்கு. 

  
 பார்க்கும் போதே ஒரு நாவலை படமாக்கி உள்ளனர் என்று நன்றாகவே தெரிந்தது. (சற்றே பெரிய கவிதை என்றும் சொல்லலாம்). குழந்தைகள் நடித்த படம் , ஆனால் குழந்தைகளுக்கான படம் என்றும் சொல்ல இயலாது. (சில விவகாரமான விஷயங்கள் படத்தில் உண்டு. அதுக்காக, எது என்னமோன்னு நினைக்காம நல்ல புள்ளையா படத்தை பாருங்க). ஒரு பெரலல் யுனிவர்ஸ் போன்ற விஷயம், அழகாக சொல்லப்பட்டிருந்தது. குழந்தைகளின் (புள்ளி, அமர், நிலா) உலகமும், வயது வந்தோரின் உலகமும் எவ்வளவு வேறுபடுகிறது என்பதை ரசிக்கும்படியாக சித்தரித்திருந்தனர்.
 
குழந்தைகளின் உலகத்தில் வயது வந்தோர் நுழைய முற்படும் போது என்ன இடையூறுகள் என்பதுதான் கதை. (அப்பாடா...கடைசி வரைக்கும் கதைய சொல்லலை :)) ). சிந்தனையை தூண்டும் வசனங்களும், "satiric" நகைச்சுவைகளும், குழந்தைகளின் நடிப்பும், நல்ல திரைக்கதையும் படத்தினை நன்றாக நகர்த்திச்சென்றது.

ஒரே ஒரு குறை, வால்டர் தேவாரம். இவரும் இப்படத்தில் நடித்திருக்கிறார் (?). யாரோ போலீஸ் என்றால் விறைப்பாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் போலும். படுத்தியெடுத்திவிட்டார் :( .

நாவல் என்று சொன்னேன், யார் எழுதியது என்று சொல்லவில்லையே - சுஜாதா. சற்றே பெரிய கவிதை என்று சொன்னதன் அர்த்தமும் இதுதான்.

("நிலாக்காலம்", இயக்கம் - ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா; கதை, வசனம் - சுஜாதா; சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது, 2000 - செல்வன் .உதயராஜ்)



Powered by Blogger