Saturday, August 21, 2004

சன் டிவி பட்டி மன்றங்கள்

இனிமேல் சன் டிவி பட்டி மன்றங்களை நகைச்சுவை மன்றங்கள் என்று பெயர் மாற்றம் செய்து விடலாம். ஒரு தலைப்பு கொடுத்து விடுகிறார்கள். அந்த தலைப்பின் கீழ் for-against என்று மாறி மாறி joke சொல்கிறார்கள், பாப்பையா & co(அநேகமாக இந்தியன் கிரிக்கெட் அணிக்குப் பிறகு தமிழ் நாட்டில் பிரபலமான அணி இவர்கள் தான்). தலைவர் பாப்பையா என்ன தீர்ப்பு சொல்வார் என்பதெல்லாம் நாம் தலைப்பை பார்த்த உடனே சொல்லி விடலாம். இவரது நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் latest-ஆக இருந்தாலும், இவர் கருத்துக்கள் எல்லாம் அதரப் பழசு. யாரவது இவருக்கு சொல்ல வேண்டும் - "நாம் வாழ்வது 2004 கி.பி, 2004 கி.மு அல்ல". சென்ற பட்டி மன்றத்தில் இவர் சொன்ன தீர்ப்பு-"ஆண் பெண் நட்பு தேவை அற்றது. ஏனெனில் அது நம் கலாச்சாரத்திற்கு ஒத்து வராது". பேராசிரயர் அவர்களே,"எடுக்கவோ, கோக்கவோ" என்ற வரிகளை மறந்து விட்டீர்களோ? நமக்கு பிடிக்காதவற்றை நம் கலாச்சாரத்தில் இருந்து நீக்கிவிட்டு, கலாச்சாரத்தை காரணம் காட்ட வேண்டியது. நட்பில் ஆண் என்ன பெண் என்ன?

இந்த சுதந்திர தின பட்டி மன்றத்தின் தலைப்பு - "தொல்லைகள் மிகுந்தது எது? காதல் திருமணங்களா? பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமா?". இதற்கு என்ன தீர்ப்பு சொல்லியிருப்பார் என்று நான் சொல்லித் தெரிய தேவையில்லை. "காதல் போயின் சாதலடா" என்ற தலைப்பிலும் "காத(லி)ல் போயின் சாதலடா" என்ற தலைப்பிலும் மாறி மாறி joke-கள் சொல்லிக்கொண்டனர். இடை இடையே பாடவதியான கருத்துக்கள் வேறு. உதாரணத்திற்கு,

1. ஒரு வக்கீல் அம்மா சொல்கிறார் - " என்னிடம் ஒரு சிறுவன் சொன்னான் "இது தான் சங்க காலம். ஏன் என்றால் இன்று தான் முதலியார் சங்கம், நாடார் ச்ங்கம் என்று சங்கங்கள் இருக்கின்றன". இவை தான் நம் பாரம்பரிய சின்னங்கள். இவைகள் arranged marraige-இல் தான் காக்கப் படுகிறது" (அம்மையாரே, இதுக்கு தான் வக்கீலுக்கு படுச்சீங்களாக்கும்?)
2. இன்னொரு பிரஹஸ்பதி சொல்கிறார் - சமுதாயம் யானை போல். காதலர்கள் தவளைகள் போல். அவர்களால் யானைகளிடம் மோதி ஜெயிக்க முடியாது"
3. இன்னொருவர் ஒரு ஒன்பதாம் வகுப்பு மாணவனின் காதல் லீலைகளுக்கு சமுதாயம் எவ்வாறு தடையாக இருக்கிறது என்று எடுத்துக் காட்டுடன் விவாதிக்கிறார் (ஏன் LKG-லையே love பண்ண வேண்டியது தானே?)

இவர்கள் எல்லாம் அறிவை வீட்டில் வைத்துவிட்டு வருகிறார்கள் அல்லது யாரோ இவர்களை எல்லாம் ஒரு "time machine"-இல் ஏற்றி பின் நோக்கி ஒரு நெடிய பயணத்தில் அனுப்பி வைத்து விட்டார்கள்.

வாழ்க பட்டி மன்றங்கள். வாழ்க "கலாச்சார கருமங்கள்"!

(சரி இளைஞர்களே,சரி! இதற்காக எனக்கு சிலை எல்லாம் வைக்க வேண்டாம். எங்க வூட்டுல போட்டுக் கொடுக்காம இருந்தா சரி ;)

Wednesday, August 18, 2004

ஓலிம்பிக்ஸ்

போட்டியிடும் ஒவ்வொரு மனிதனும் "வெல்ல வேண்டும்" என்ற ஒரே இலக்கோடு போட்டியிடும் மகத்தான நிகழ்வு. பங்கேற்பு தான் முக்கியம் என்று சொல்வதெல்லாம் சுத்த அபத்தம்். ஓலிம்பிக்ஸின் சிறப்பே ஒவ்வொரு வீரனும் தனக்கும் உலகிற்கும் தன் திறமையை நிரூப்பிப்பது தான். ஒரு தங்கமாவது நம்மவர்கள் ஜெயிப்பார்களா என்று ஏக்கத்தோடு இருந்து ஏமாந்து போனாலும், சில வீரர்களின் அசாதாரன சாகசங்களால் ஒவ்வொரு ஒலிம்பிக்ஸ¤ம் என் மனதில் நீங்கா இடம் பெற்றது. நான் என் நண்பர்களிடம் அடிக்கடி உபயோகிக்கும் வாக்கியம்-"The triumph of human spirit". இதற்கான சில எடுத்துக் காட்டுக்கள்-

1)1988 Seoul Olympics- க்ரெக் லுகானிஸ் 3 மீட்டர் spring board diving போட்டியில், தலையில் காயம் ஏற்பட்ட் போதும், போட்டியிட்டு தங்கம் வென்றார்.

2)1996 Atlanta Olympics - கெரி ச்ட்ரக் (Kerri Strug) அமெரிக்காவின் Gymnastic குழுவின் உறுப்பினர். Team Event-இல் தங்கம் வெல்ல கெரி 9.7 புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தது. ஆனால் துரதிஷ்ட வசமாக கெரியின் கால்களில் பலத்த காயம். இவர் பங்கேற்பதே கடினம் என்று இருந்ததது. ஆனால் கெரி கலங்காமல், வலியினை பொருட்படுத்தாமல் முயற்சித்தார். அவரது முயற்சியின் பலன் 9.73 புள்ளிகள். அவர் முகத்தில் தெரிந்த வலியும், சந்தோஷமும், பெருமிதமும் மறக்க முடியாது. இதனை "One of the greatest moments of Olympics" பட்டியலில் கண்டிப்பாக பார்க்கலாம்.

இது போல் எத்தனையோ நினைவுகள்.இந்த ஒலிம்பிக்ஸை ஞாபகம் கொள்ள ஏற்கனவே ஒரு காரணம் கிடைத்து விட்டது - ரதோர். ஒரு பில்லியன் மக்களின் ஓரு தங்கத்தின் தேடல் இம்முறை வெற்றி காணும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் - பேஸ்-பூப்பதி அல்லது தன்ராஜ் & கோ ( தன்ராஜிற்கு ஒரு fairy tale ending என்று ஏதோ சொல்கிறது). :(

இந்த ஓலிம்பிக்ஸ் படு சுவாரஸ்யமாக உள்ளது -Dream Team தோற்றது, "The race of the century"-யினை தோர்ப் ஜெயித்தது, இதற்கு பெல்ப்ஸ் 4*200 relay-வில் சரி கட்டியது,கால் பந்தில் ஈராக்கின் "தேன் நிலவு"! இத்தனைக்கும் நான்கே நாட்கள் தான் ஆகின்றன. இந்திய வீரர்களை மட்டும் கவனித்து மற்றதை கோட்டை விட்டு விடாதீர்கள்.

Tuesday, August 17, 2004

இவருக்கு நகைச்சுவை உணர்வு ரொம்பவே அதிகம்

இதனை நான் "Rediff"-இல் படித்தேன். Good Joke.
Says a major filmmaker. "I haven't seen the Tamil film for which Vikram has won the Best Actor award [Pithamagan]. But it is impossible to believe he was better than Hrithik in Koi Mil Gaya. A performance like that comes once in a blue moon. Why didn't they give the special jury award to Hrithik instead of Manoj Bajpai for
Pinjar?"
இது போகட்டும். ரொம்ப நாளா ஒரு doubt. பிதாமகன் திரைப்படத்தில் ஒரு காட்சி. விக்ரம், சூர்யா,லைலா "அன்பே சிவம்" திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திரைப்படத்தின் கடைசி "frame". கமல் "யார் யார் சிவம்" என்ற பாடல் background-இல் ஒலிக்க மழையில் நனைந்தவாரே "அந்த" பக்கம் நடந்து சென்று விடுவார். இங்கு theatre-இல் விக்ரம் மட்டும் "டொபுக்கென்று" எழுந்து நிற்பார். இது தற்செயலாக நடந்ததா, இல்லை "அடுத்த கமல்" என்று பாலா மறைமுகமாக சொல்கிறாரா?

Thursday, August 12, 2004

நியூ-ஒரு நல்ல எடுத்துக்காட்டு

தலைப்பை பார்த்து விட்டு இது நியூ படத்தின் விமர்சனம் என்று நினைத்தவர்களுக்கெள்ளாம் -"Iam sorry, நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. விரசமான திரைப்படம் என்று விமர்சனங்களை படித்து விட்டு, உடனே அருகில் உள்ள theatre-ல் மூன்று மணிநேரம் கண் சிமிட்டாமல் பார்த்து விட்டு "மிகவும் விரசம்" என்று என் பதிவில் கருத்து தெரிவிக்கும் ஆளும் நானில்லை".(அப்பாடா, ஒட்டு மொத்த ப்லாகர் சமூகத்தையும் நக்கல் அடிச்சாச்சு!)
சரி,சரி! பெரிய ஞானி மாதிரி எல்லாம் பேசாம, உண்மையை நானே ஒப்புக் கொள்கிறேன் - நான் நியூ பார்க்காததற்கு ஒரே காரணம் நான் இருக்கும் இடம் தான் - பெங்களூர்! ஆமாங்க இங்க தமிழ்ப் படமெல்லாம், மூட்ட பூச்சிகளுக்கு பேர் போன theatre-la தாங்க ஒடும்(?). அது கூட பரவாயில்லைங்க, ஒரு தடவை என் seat-க்கு கீழ் ஜம்முன்னு ஒரு நாய் தூங்கிக்கிட்டு இருந்துச்சு! இப்படி theatre-கள் இருந்தும்,"நியூ" அசராமல் பெங்களூரில் "House-full"-ஆக ஓடியது!(விருமாண்டி இங்கு multiplex-இல் release செய்யப்பட்டது. இரண்டாம் நாள் theatre-இல் என்னை சேர்த்து நாலே பேர் :( )
இந்த "அனைவராளும் பார்க்கப் படும் விரசமான படம்" வேரொரு நல்ல விஷயத்திற்கு எடுத்துக்காட்டு-தூய தமிழில் பாடல் வரிகள் கொண்டும் ஒரு பாடல் இன்று hit ஆகலாம் ! "தொட்டால் பூ மலரும்" என்ற பாடல் நல்ல hit. தினம் சுப்ரபாதம் போல் அனைத்து டி.வி channel-களிலும் ஒளிபரப்பப் படுகிறது! வித்யாசமான(என்கிருந்தோ காப்பி அடிக்கப் பட்ட) video-வை விட, பழைய வரிகளுக்கு புத்துயிர் ஊட்டிய ரெஹமானின் இசையை விட என்னை மிகவும் கவர்ந்த விஷயம் "Maro Maro Boys கைகள் Tomorrow" என்று முணுமுணுத்த உதடுகளை "தொட்டால்....." என்றும் முணுமுணுக்க வைத்தது தான். தமிழ் பாடல்களை இன்றும் தமிழிலேயே எழுதலாம் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு!

Powered by Blogger